நாட்டின் 18 வயதை அடைந்த அனைவருக்கும் இவ்வருடம் தனிநபர் வரி இலக்கம் (ரின் இலக்கம்) பெறுவதை அரசு அத்தியாவசியம் செய்திருக்கிறது.ஆனால் இதை வைத்து பாரிய மோசடி ஒன்றில் ஈடுபடும் கும்பல் தொடர்பாக செய்து தற்ப்போது செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.
வங்கியில் இருந்து கதைப்பதாக கூறி டின் இலக்கத்தை பெற்றுக்கொண்டு விட்டீர்களா என்று அழைப்பு மேற்கொண்டு , “இல்லை” என்றவுடன் வங்கியில் இருந்து டின் இலக்கத்தை செய்து தருவதாக கூறுகிறார்கள் .
பின்பு ஓ.டீ.பி(OTP) இலக்கம் ஒன்று வரும் அதை சொல்ல கேட்பார்கள் .அதை சொன்னவுடன் கணக்கில் இருந்த மொத்த பணமும் திருடப்பட்டு விடும் .
இதே போன்ற முறையில் பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக வானொலி நிகழ்ச்சி ஒன்றில் குறிப்பிடப்பட்டது .
அவ்வாறு அழைப்பு ஏதும் வந்தால் முதலில் வங்கிக்கு அழைப்பு மேற்கொண்டு அதனை உறுதி செய்து கொள்ளுங்கள் .
ஓ.டீ.பி. என்பது ஒரு முறை தொலைபேசி இலக்கத்திற்கு வரும் பாஸ்வேர்ட் ஆகும் . அதனை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் . முக்கியமாக வயதானவர்களுக்கு இதனை சொல்லி கொடுங்கள் .
ரின் இலக்கம் பதிவு செய்வது வங்கியின் தொழில் அல்ல , சில வேளை இறைவரித் திணைக்களத்தில் இருந்து கதைப்பதாக கூறி அழைப்பு வரவும் வாய்ப்பு உண்டு.
இது போன்ற எந்த தருணத்திலும் வங்கி இலக்கம் , ஏ.டீ.எம். காட் இலக்கம் மற்றும் ஓ.டி.பி இலக்கங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என சொல்லிக்கொடுங்கள் .
அவசரமாக இதனை உங்கள் உறவுகளுக்கு தெரியப்படுத்துங்கள்.