இந்த வருட இறுதிக்குள் 135,000 இராணுவப் பணியாளர்களை இலக்காகக் கொண்டு இலங்கை இராணுவ ஆட்குறைப்புப் பணிகளை இலங்கை அரசு ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமிதா பண்டார தென்னகோன், இலங்கை இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை மூன்றில் ஒரு பங்காக குறைத்து இந்த ஆண்டுக்குள் 135,000 ஆகவும், 2030க்குள் 100,000 ஆகவும் குறைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
அந்த அடிப்படையில் இந்த ஆண்டு இறுதிக்குள் 135,000 படையினரையும், 2030க்குள் 100,000 பேரையும் அடையும் இலக்குடன் இலங்கை தனது இராணுவப் பணியாளர்களைக் குறைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளது.
நிதிச் சீர்திருத்தங்களின் ஒரு பகுதியான இந்தக் குறைப்பு நடவடிக்கை ஏற்கனவே 200,783 இலிருந்து கிட்டத்தட்ட 150,000ஆளணியாக குறைக்கப்பட்டது.
அந்த வகையில் தற்போது இராணுவத்தில் பொது ஆட்சேர்ப்பு நிறுத்தப்பட்டுள்ளதுடன், அத்தியாவசிய பிரிவுகளுக்கு மட்டுமே ஆட்சேர்ப்பு இடம்பெறுகிறது.
அதேசமயம் விமானப்படையில் சுமார் 27,000 பணியாளர்கள் குறைந்துள்ளதுடன், கடற்படையில் சுமார் 40,000 பணியாளர்களே காணப்படுகின்றனர்.