மட்டக்களப்பு காத்தான்குடியில் இன்று அதிகாலை சுழல் காற்று வீசியுள்ளது. சுழல் காற்றால் கடற்கரையோரமிருந்த மரங்கள் முறிந்து வீழ்ந்ததால், காத்தான்குடி ஆறாம் குறிச்சி ஏ.ஈல்.ஈஸ்.மாவத்தையில், மின்சார இணைப்புக்களுக்கு சேதமேற்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபையின் காத்தான்குடி அலுவலக ஊழியர்களின் துரித செயற்பாட்டால், மின் இணைப்புக்கள் சீர் செய்யப்பட்டு, அப் பகுதிக்கு மீளவும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/02/image-315.png)