Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு அபிவிருத்திக் குழு கூட்டத்தில் அதாவுல்லாவுக்கு என்ன வேலை?; பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி!

மட்டக்களப்பு அபிவிருத்திக் குழு கூட்டத்தில் அதாவுல்லாவுக்கு என்ன வேலை?; பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அதாவுல்லா வந்து கலந்து கொண்டு மாவட்ட பிரச்சினைகளை பேச விடாது தடுக்கிறார் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இன்று அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில்,

அதாவுல்லா எவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலைவராக தெரிவு செய்யப்பட்டார் என்று தெரியவில்லை இவருக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பிரச்சனைகள் தொடர்பாக எதுவும் தெரியாது.

கடந்த கால கூட்டங்களில் ஒவ்வொரு தலைப்பிலும் பேசி ஆராயப்படும் அதாவது கல்வி, சுகாதாரம், விவசாயம் என வரும் அதன் ஒழுங்கில் கூட்டத்தில் ஆராயப்பட்டு தீர்வு காணப்படும்.
ஆனால் தற்போதைய கூட்டத்தில் சரியான ஒழுங்கில் கூட்டம் இடம்பெறாது அவர்களுக்கு ஏற்றாற்போல் கூட்டத்தை நடத்துகின்றார்கள்.

இல்மனைட் அகழ்வினை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அனுமதி புதுப்பிக்க கோரிக்கை முன்வைத்திருக்கின்றனர் அதனை கதைப்பதற்கு நேரம் வழங்குகின்றார்கள் இல்லை.

மென்டிஸ் கம்பனியின் கழிவுகள் நீர்நிலையில் கலந்து மீன்கள் இறந்தது, விவசாயிகளுக்கு சரியான முறையில் நஷ்ட்டஈடு வழங்குதல் போன்ற விடயங்கள் தொடர்பாக கதைக்க நேரம் வழங்கவில்லை.

மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்கள் தங்களது கால்நடைகள் கொல்லப்படுவது தொடர்பாக மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் கதைப்பதற்கும் நேரம் வழங்கவில்லை .

மாவட்டத்தில் யானைகளினால் ஏற்படும் பாதிப்புக்கள் அதனை கட்டுப்படுத்த செயற்பாடுகளை முன்னெடுக்காது மட்டக்களப்பில் யானைகள் சரணாலயம் அமைப்பதற்கு முன்மொழியப்படுகின்றது.

மாந்தீவில் சிறைச்சாலை அமைப்பதற்கு முன்மொழியப்படுகின்றது அதனை நிறுத்த வேண்டும் என கடிதம் அனுப்பவேண்டும் என கேட்டபோது அதனை சிறைச்சாலைக்கு கொடுத்தால் என்ன என சந்திரகாந்தன் கூறுகின்றார்.

கிரான் குளம் பகுதிகளில் உள்ள அரச நீர்ப்பாசன காணிகளை நிரப்பி அபகரிக்கின்றார்கள் அவற்றிற்கான ஒரு தீர்வுகள் எட்டப்படுவதற்கு ஒரு முன்னெடுப்புகளையும் செய்ய முடியாத நிலை.

பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் சரியான முறையில் இன்னமும் இடம்பெறவில்லை ஆனால் கூட்டம் இடம்பெறாத பகுதிகளில் பல பிரச்சனைகள் காணப்படுகின்றது மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் இடம்பெற்று முடிவடைந்த தன் பிற்பாடு பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் நடத்துகின்றார்கள்.

இராணுவ முகாம்கள் அகற்றும் விடயம் தொடர்பாக கதைத்தால் அதற்கு ஒரு தீர்மானம் எடுக்க வேண்டும் என கேட்டால் அதனை என்னால் முன்வைக்க முடியாது என சந்திரகாந்தன் கூறுகின்றார் இவ்வாறு செயற்படுவதாயின் எதற்கு இந்த மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் என்றார்.

தொடர்புடையசெய்திகள்

கீரி சம்பா அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தக நிறுவனத்திற்கு ரூ.5 இலட்சம் அபராதம்!
செய்திகள்

கீரி சம்பா அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தக நிறுவனத்திற்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

October 1, 2026
டிஜிட்டல் யுகத்தில் புதிய வடிவம் பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்கள்; தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை
செய்திகள்

டிஜிட்டல் யுகத்தில் புதிய வடிவம் பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்கள்; தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை

October 1, 2026
நிர்ணயிக்கப்பட்ட விலையை மீறி குடிநீர் விற்பனை; பம்பலப்பிட்டி உணவகத்திற்கு ரூ.10 இலட்சம் அபராதம்!
செய்திகள்

நிர்ணயிக்கப்பட்ட விலையை மீறி குடிநீர் விற்பனை; பம்பலப்பிட்டி உணவகத்திற்கு ரூ.10 இலட்சம் அபராதம்!

October 1, 2026
ரணில் விக்ரமசிங்கவின் மெய்ப்பாதுகாவலர் மீதான தாக்குதல்; ஊடகவியலாளர் பொலிஸ் பிணையில் விடுதலை
செய்திகள்

ரணில் விக்ரமசிங்கவின் மெய்ப்பாதுகாவலர் மீதான தாக்குதல்; ஊடகவியலாளர் பொலிஸ் பிணையில் விடுதலை

October 1, 2026
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் O-நெகட்டிவ் வகை குருதிக்கு பாரிய தட்டுப்பாடு
செய்திகள்

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் O-நெகட்டிவ் வகை குருதிக்கு பாரிய தட்டுப்பாடு

October 1, 2026
கடற்படை சோதனையில் சட்டவிரோத பீடி இலைகள் மீட்பு
செய்திகள்

கடற்படை சோதனையில் சட்டவிரோத பீடி இலைகள் மீட்பு

October 1, 2026
Next Post
5 ஆவது சதம் அடித்தார் பெதும் நிஸ்ஸங்க!

5 ஆவது சதம் அடித்தார் பெதும் நிஸ்ஸங்க!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.