நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதற்காக குறுகியவழிமுறைகள் எதுவும் இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் என ஐலண்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி அலுவலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருடனான சந்திப்பின்போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதற்கு குறுகியவழிமுறைகள் எதுவும் இல்லை என இந்த நாட்டு மக்களிற்கு நன்கு தெரியும்.
ஜனாதிபதி தேர்தலை பிற்போடும் நோக்கம் எனக்கில்லை என்பதை நான் பல தடவை தெரிவித்துள்ளேன். அதற்கான நிதிகள் உள்ளன நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைநீக்கம் குறித்த கதைகளை எதிர்கட்சியினரே பரப்பிவருகின்றனர்.
ஜனாதிபதி தேர்தல் உரிய நேரத்தில் இடம்பெறும் இக்காலப்பகுதியில் நிறைவேற்று அதிகார ஜனாபதி முறை நீக்கப்படாது என்று மேலும் தெரிவித்துள்ளார்.