நோர்வே நாட்டு ஆய்வுக் கப்பலான டாக்டர் ப்ரிட்ஜோப் நான்சன் என்ற கப்பல் இலங்கை விஜயத்திற்கு அனுமதி கோரிய நிலையில், அந்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
உலக நாடுகளின் ஆய்வுக் கப்பல்கள் இலங்கைக்கு வருவதை மையப்படுத்தி ஏற்பட்ட புவிசார் அரசியல் நெருக்கடி மற்றும் இராஜதந்திர அழுத்தங்கள் என்பவற்றின் அடிப்படையில் குறுகிய காலத்திற்கு ஆய்வுக் கப்பல்களுக்ககு தடைக்காலம் விதிக்கப்பட்டுள்ளது.

அந்த தடைக்காலத்தை மேற்கோள்காட்டியே நோர்வே ஆய்வுக் கப்பலுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
கடலுக்கடியில் தானியக்க வாகனங்களைப் பயன்படுத்துவது உட்பட சிக்கலான, பல்துறை ஆராய்ச்சிகளை முன்னெடுப்பதில் டாக்டர் ப்ரிட்ஜோப் நான்சன் ஆய்வுக் கப்பல் முக்கியத்துவம் பெற்றதாகும்.
ஆபிரிக்கா, ஆசியா மற்றும் நோர்வே கடல் பரப்புகளில் பணியாற்றியுள்ள இந்த ஆய்வுக் கப்பல் இலங்கை விஜயத்திற்கு அனுமதி கோரியுள்ளது.