யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்கள் கற்றல் செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கி இருக்க எடுத்த தீர்மானத்தை தற்காலிகமாக கைவிட்டுள்ளனர்.
விஞ்ஞான பீடத்தில் கல்வி பயிலுகின்ற மாணவர்களின் வரவு பிரச்சினைகள் தொடர்பில் பல்கலைக்கழக விசேட நிர்வாக கூட்டத்தில் (board meeting) கலந்துரையாடுவதற்கு விஞ்ஞான பீட மாணவர் ஒன்றியத்தால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் நேற்று முதல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இது தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர் ஒன்றியம் வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“இன்று எம்மால் முன்னெடுக்கப்பட்ட கல்விப் புறக்கணிப்பு போராட்டத்தை தற்காலிகமாக முடிவுக்குக்கொண்டு வருகின்றோம்.
அத்துடன் கீழ்க்காணும் முறைப்பாடுகளை ஆதாரபூர்வமாக விஞ்ஞான பீட நிர்வாகத்துக்கு நிரூபித்துள்ளோம்” என்றுள்ளது.
