சீனாவில் சுமார் 240 மில்லியன் ஆண்டுகள் பழமையான ட்ரேகன் போன்ற விலங்கின் படிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .
இந்த அமைப்பு 2003 ம் ஆண்டு முதன்முதலில் தெற்கு சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர் .
ட்ரேகன் போன்ற விலங்கின் அமைப்பு 16 அடி நீளம் கொண்டதாகவும் கடந்த காலத்தில் வாழ்ந்ததாக நீர்வாழ் உயிரினத்தின் அமைப்பு எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந்து விலங்கினுடைய கழுத்து பகுதியைப் பார்க்கும் போது ட்ரேகன் விலங்காக இருக்கலாம் எனவும் நம்பப்படுகின்றது .
இந்த விலங்கு அறிவியல் ரீதியாக “டைனோசெபலோசரஸ் ஓரியண்டலிஸ்” என்று அழைக்கப்படுகிறது.