வங்கிகள் தங்கள் வைப்பாளர்களின் பணத்தைப் பாதுகாப்பதற்காக கடனாளிகளிடமிருந்து கடன்களை மீளப் பெறுவதற்கான சட்ட நடவடிக்கை சட்டமான பரேட் சட்டம் (Parate Law) நடைமுறைப்படுத்தப்படுவதை இடைநிறுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
நீதி மற்றும் கைத்தொழில் அமைச்சர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி எதிர்வரும் 2024 டிசம்பர் 15ஆம் திகதி வரை பரேட் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை இடைநிறுத்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
வங்கிகள் தங்கள் வைப்பாளர்களின் பணத்தைப் பாதுகாப்பதற்காக கடனாளிகளிடமிருந்து கடன்களை மீளப் பெறுவதற்கான சட்ட நடவடிக்கை சட்டத்தின் (Parate Law) அதிகாரங்களை தற்காலிகமாக நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய முன்னதாக தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் அமைச்சரவையில் பிரேரணை சமர்ப்பிக்கப்படும் எனவும், குறிப்பிட்ட காலத்துக்கு பரேட் சட்டத்தின் அதிகாரங்களை மட்டுப்படுத்தும் யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.