நாட்டைப் பிரிக்கும் ரணிலின் திட்டத்தை முறியடிப்பதற்காகவே நாம் அன்று மகிந்த ராஜபக்சவை இலங்கை ஜனாதிபதியாக்கினோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், “ரணில் விக்ரமசிங்க, விடுதலைப்புலிகளுடன் ஒப்பந்தம் செய்து நாட்டைப் பிரிப்பதற்குத் தயாரான போது, அதைத் தோற்கடிப்பதற்காகவே நாம் மகிந்தவை நாட்டின் அதிபராக்கினோம்.
அவ்வாறு நாம் மகிந்தவை அதிபராக்கியது திருடுவதற்கு என்றால் அதை நாம் பாரமேற்போம். ஆனால் அவ்வாறில்லை. மாறாக ரணில் விக்ரமசிங்கவின் திட்டத்தை தோற்கடிப்பதற்காகவே நாங்கள் மகிந்தவைக் கொண்டு வந்தோம் என தெரிவித்துள்ளார்.