இந்திய அரசிடமிருந்து இலங்கைக்கு கடற்றொழிலாளர்கள் தொடர்பான பிரச்சினை குறித்து தொடர்ச்சியாக அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுமானால் எனது அமைச்சர் பதவியை விட்டு விலகி கடலில் போராடுவேன் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாதெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம்(27.02.2024) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
இலங்கைக்கான இந்திய தூதுவருடன் பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டது. இலங்கையில் அதிகார பகிர்வு குறித்து கலந்துரையாடினோம்.
நான் நீண்டகாலமாக எதை கூறி வந்தேனோ அதைத்தான் வரலாறும் இன்று ஏற்றுக் கொண்டிருக்கின்றது.
நாட்டினுடைய வருங்கால அரசாங்கம் எப்படி இருக்கும், யார் இருப்பார்கள் என்றும் கலந்துரையாடினோம். அதைவிட மிக முக்கியமாக சமீபத்தில் ஜேவிபி கட்சியின் தலைவர் புதுடெல்லிக்கு சென்று இருந்தார். ஆனால் அவர் அங்கு எமது கடல் தொழிலாளர்களின் பிரச்சினை குறித்து எந்த ஒரு கருத்தும் கூறவில்லை” என்றார்.