ஆண்டுக்கு சம்பளமாக மட்டும் ரூ. 1800 கோடிக்கு மேல் வாங்கும் Google CEO சுந்தர் பிச்சை வேலைக்கு ஆபத்து இருப்பதாக கூறப்படுகிறது.
கூகுளின் தாய் நிறுவனமான Alphabet-ன் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை பற்றி ஒரு பாரிய செய்தி வெளியாகியுள்ளது.
Google-ன் தலைமை நிறைவாக அதிகாரி பதவியிலிருந்து சுந்தர் பிச்சை இராஜினாமா செய்யலாம் அல்லது பணிநீக்கம் செய்யப்படலாம் என இந்திய அமெரிக்க தொழிலதிபரும், Helios Capital Management நிறுவனருமான சமீர் அரோரா (Samir Arora) கூறியுள்ளார்.
AI துறையை வழிநடத்திய போதிலும், சுந்தர் பிச்சை முற்றிலும் தோல்வியடைந்ததாகவும், மற்றவர்கள் அவரது இடத்தைப் பிடிக்கும் வழியில் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
கூகுளின் புதிய AI கருவியான Gemini தோல்வியடைந்ததால் இந்த விவாதம் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக சமீர் அரோரா ட்வீட் செய்திருப்பது விவாதம் வலுப்பெற்றுள்ளது.
ஜெமினி என்பது கூகுளின் தயாரிப்புதான். முன்பு Bard என்று இருந்த அதன் பெயர் இப்போது Gemini என்று மாறிவிட்டது.
இது நன்றாகத்தான் இயங்கிவந்தது. ஆனால் சமீபகாலமாக தவறான படங்களை உருவாக்கி செய்திகளில் இடம்பிடித்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பு, ஜெமினியின் AI சில இரண்டாம் உலகப் போர் வீரர்கள் மற்றும் அமெரிக்காவின் நிறுவனர்களின் தவறான படங்களை உருவாக்கியது.
இதற்குப் பிறகு, நிறுவனத்தைச் சேர்ந்த நபர் பணிநீக்கம் செய்யப்பட்டார், பின்னர் அதன் AI படத்தை உருவாக்கும் அம்சம் நிறுத்தப்பட்டது. மேம்படுத்தப்பட்ட பின்னரே மீண்டும் அந்த அம்சம் அறிமுகப்படுத்தப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் சமீர் அரோரா வெளியிட்டுள்ள இந்த கருத்து பலர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.