Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அதிகரித்து வரும் எலான் மஸ்க் – ட்ரம்ப்ற்கு இடையிலான கருத்து மோதல்

அதிகரித்து வரும் எலான் மஸ்க் – ட்ரம்ப்ற்கு இடையிலான கருத்து மோதல்

1 year ago
in உலக செய்திகள், செய்திகள்

‘நான் இல்லையெனில் ட்ரம்ப் தேர்தலில் தோற்றிருப்பார்” என தொழில் அதிபர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கடந்தாண்டு நடந்த ஜனாதிபதித் தேர்தலில், குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்ட் ட்ரம்புக்கு, பிரபல தொழிலதிபரும், ‘ஸ்பேஸ் எக்ஸ்’ விண்வெளி தொழில்நுட்ப நிறுவனருமான எலான் மஸ்க் ஆதரவும் நிதியுதவியும் செய்தார்.

இதேவேளை கடந்த ஜனவரியில், ஜனாதிபதி ட்ரம்ப் பொறுப்பேற்றதும், அரசின் செலவை குறைக்கவும், திறனை மேம்படுத்தவும் சிறப்பு துறையை உருவாக்கினார். இதன் தலைவராக எலான் மஸ்க் இருந்தார்.

இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதலால், சமீபத்தில் அந்தப் பொறுப்பில் இருந்து எலான் மஸ்க் விலகினார்.

இந்நிலையில், ட்ரம்ப் அரசு சார்பில் புதிய செலவு மற்றும் வரி மசோதாவை செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கும் எலான் மஸ்க் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். இந்நிலையில், எலான் மஸ்குக்கு ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக தன் சமூக வலைதள பக்கத்தில், ‘நமது வரவுசெலவுத்திட்டத்தில் , பில்லியன் கணக்கான டொலர்களில் பணத்தைச் சேமிப்பதற்கான எளிதான வழி, எலானின் நிறுவனத்துக்கான அரச மானியங்கள் மற்றும் ஒப்பந்தங்களை நிறுத்துவதாகும்’ என, அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, எலான் மஸ்குடனான பிரிவு ஏமாற்றம் அளிப்பதாக ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இந்நிலையில், ட்ரம்ப் மீது எலான் மஸ்க் கடும் விமர்சனத்தை முன் வைக்க தொடங்கினார்.

”நான் இல்லாமல் ட்ரம்ப் தேர்தலில் தோற்றிருப்பார்” என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

ஆனால் ”நான் பென்சில்வேனியாவை வென்றிருப்பேன். நான் அதிக வித்தியாசத்தில் வென்றிருப்பேன்” என்று ட்ரம்ப் பதில் கொடுத்துள்ளார்.

நண்பர்களாக இருந்த எலான் மஸ்க், ட்ரம்ப் இடையே மோதல் உக்கிரம் அடைந்துள்ளதால் இருவரும் மாறி மாறி விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!

June 6, 2026
பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை
செய்திகள்

பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை

June 6, 2026
பாணந்துறையில் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் கைது
செய்திகள்

பாணந்துறையில் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் கைது

June 6, 2026
மீகொடை விபத்து; மேலும் இரு சந்தேகநபர்கள் கைது
செய்திகள்

மீகொடை விபத்து; மேலும் இரு சந்தேகநபர்கள் கைது

June 6, 2026
புத்தூரில் கோர விபத்து; இளைஞர் உயிரிழப்பு, இருவர் கவலைக்கிடம்!
செய்திகள்

புத்தூரில் கோர விபத்து; இளைஞர் உயிரிழப்பு, இருவர் கவலைக்கிடம்!

June 6, 2026
சங்கீர்த்தனனின் விடுதலையை வலியுறுத்தி இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்
செய்திகள்

சங்கீர்த்தனனின் விடுதலையை வலியுறுத்தி இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்

June 6, 2026
Next Post
பிலிப்பைன்ஸ் நாட்டவரை திருமணம் செய்யும் இலங்கையர்களுக்கு 5 ஆண்டு தற்காலிக வதிவிட விசா

பிலிப்பைன்ஸ் நாட்டவரை திருமணம் செய்யும் இலங்கையர்களுக்கு 5 ஆண்டு தற்காலிக வதிவிட விசா

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு