கனடாவுக்கு அனுப்புவதாக கூறி பெருந்தொகை பணத்தை மோசடி செய்த இரட்டைக் குடியுரிமை கொண்ட பெண்ணொருவரை பாணந்துறை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண் மாலம்பே பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அவர் கனடாவில் கணக்காளராக கடமையாற்றுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பாணந்துறை பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திற்கு இவர் தொடர்பில் நான்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், நாட்டிலுள்ள சுமார் 12 பொலிஸ் நிலையங்களில் அவர் பற்றிய முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சந்தேகநபர் சுமார் 8 வருடங்களாக பொலிஸாரிடம் இருந்து தலைமறைவாகியுள்ளதாகவும், மற்றுமொரு பொலிஸ் பணிக்காக சென்றிருந்த வேளையில் மாலம்பே பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.