தமது மாமியினை கொலை செய்து விட்டு பொலிசாரின் பிடியில் படாமல், தலைமறைவாகி தப்பித்து வந்த கொலையாளி நேற்று 28 பிற்பகல் வேளை வாழைச்சேனை பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து கிரான் நூறு வீட்டுத் திட்டப் பகுதியில் தமது உறவினரது வீட்டில் பதுங்கியிருந்த நிலையில் அங்கு சென்ற பொலிஸ் விசேட குழுவினர் குறித்த நபரை கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளதாக தெரிவித்தனர்.

கடந்த 23.02.2024 அன்று வெள்ளிக்கிழமையன்று இரவு கூரிய ஆயுதத்தினால் 48 வயதுடைய தமது மாமியை தாக்கி கொலை செய்து விட்டு அருகில் உள்ள காட்டுப் பகுதி மற்றும் அயல் கிராமங்களில் பொலிசாரின் கைகளில் சிக்காமல் தலைமறைவாகி தப்பித்து வந்த நிலையில் நேற்று 5 நாட்கள் கடந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.இவர் கைது செய்யப்படாமல் மறைந்திருந்த காலத்தில் பிரதேச மக்கள் அச்சத்தில் காணப்பட்டனர் இதற்கான கரணம் கொலையாளி ஏற்கனவே 9 வருடங்களுக்கு முன்பு இதே போன்று தமது மாமனாரை கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கி கொலை செய்திருந்தார்.

இதற்காக அவர் மட்டக்களப்பு சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வந்த நிலையில் கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்பு சிறைசாலையில் இருந்து பிணையில் விடுதலையாகி வீடு வந்து சேர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

