மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதி, நாவலடி பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் குடும்பபெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து நேற்று (03) காலை இடம்பெற்றுள்ளது. அவருடன் பயணம் செய்த கணவர் பலத்த காயங்களுடன் வாழைச்சேனை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கல்லூரியில் கல்வி கற்கும் தனது மகளைப் பார்வையிட்டுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் 53 வயதுடைய அப்துல் ஹமீத் ஜமீலா என்பவர் உயிரிழந்துடன், மோட்டார் சைக்கிளுக்குக் குறுக்கே நாய் பாய்ந்தமையால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.