மண்முனை வடக்கு மற்றும் காத்தான்குடி பிரதேச செயலக பகுதிகளை மையமாகக் கொண்டு இயங்கிவரும் அல்-பஜ்ர் நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் இரத்ததான முகாமொன்று ஞாயிற்றுக்கிழமை (03) மஞ்சந்தொடுவாயில் அமைந்துள்ள அல்-பஜ்ர் மண்டபத்தில் அதன் தலைவர் எஸ்.ஏ.கே.பழீலுர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.

மேற்படி நிகழ்வில் பிரதம அதிதியாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன் கலந்து கொண்டார்.
மேற்படி அமைப்பினால் இரண்டாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான முகாமில் அதிக எண்ணிக்கையிலான இளைஞர் மற்றும் யுவதிகள் உட்பட 70 இற்கும் அதிகமானோா் ஆர்வத்துடன் இரத்ததானம் செய்தனர்.

காத்தான்குடி தள வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எம்.எஸ்.எம்.ஜாபிர், இரத்த வங்கிக்கு பொறுப்பான வைத்திய அதிகாரி அலீமா அப்துல் றஹ்மான், காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரீ.பீ.கஜநாயக்க, மஞ்சந்தொடுவாய் பிரதேச கிராம சேவை உத்தியோகத்தா் எம்.லவக்குமார், அல்-பஜ்ர் நலன்புரி அமைப்பின் உப தலைவர் எம்.ஐ.அப்துல் அலீம், செயலாளர் எம்.ஐ.எம்.கமால்தீன், சிரேஷ்ட ஊடகவியலாளர்களான ரீ.எல்.ஜௌபர்கான், எம்.எஸ்.எம்.நூா்தீன் உட்பட பள்ளிவாயல்களின் நம்பிக்கையாளர்கள், அல்-பஜ்ர் நலன்புரி அமைப்பின் அங்கத்தவர்கள், பிரதேச கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், மண்முனை வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தா்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


