மன்னார் – அடம்பன் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மன்னார் மறைமாவட்ட அருட்தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தானது நேற்று (4)மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதன் போது மன்னார் மறைமாவட்ட அருட்தந்தை டிலான் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/03/image-129-601x1024.png)
மன்னார் – அடம்பன் பகுதியூடாக அருட்தந்தை மோட்டார் சைக்கிளில் பயணித்தவேளை எதிரே வந்த கனரக வாகனத்துடன் மோதுண்டதில் விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக மன்னார் பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும், விபத்து தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.