நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
நிலவும் வரட்சி காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள நீர் தட்டுப்பாடு காரணமாக இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/03/image-131-1024x576.png)
தற்போது நிலவும் அதிக வெப்பம் மற்றும் வரட்சியான காலநிலை காரணமாக நீர் நுகர்வு பெருமளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குடியிருப்புகள் மற்றும் அலுவலகங்களில் உள்ள குடிநீரை செடிகள் மற்றும் தோட்டங்களுக்கு நீர் பாய்ச்சுவதற்கு வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.