கண்டியில் மத்திய மாகாண ஆளுநர் லலித் யூகமகேயின் அலுவலகத்திற்கு முன்பாக நேற்று திங்கட்கிழமை (4) மத்திய மாகாண 136 உதவி ஆசிரியர்கள் நியமனத்தை உறுதி செய்யுமாறு வலியுறுத்தி போராட்டத்திலீடுபட்டனர்.
பல முறை கூறி இதுவரை எவ்வித நியமனமும் வழங்கப்படாமல் இருப்பதால் ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக உதவி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுக்குமாரின் கவனத்திற்கு கொண்டு சென்றதையடுத்து குறித்த இடத்திற்கு உடனடியாக அவர் சென்று ஆளுநருடன் கலந்துரையாடிய பின், உதவி ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார்.
இதன் போது வேலுக்குமார் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுடனும் திறைசேரி உடனும் அவசியமான கலந்துரையாடி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
அதேநேரம் ஆசிரியர் உதவியாளர்களுக்கு இடம்பெற்றது பாரிய அநீதி என்றும் இது மொத்த மலையக மக்களுக்கு இழைக்கப்படும் பாரபட்சம் என்றும் மேலும் வேலுகுமார் தெரிவித்தார்.