உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஒரு வருடத்துக்கு முன்னர், அல்-கொய்தா பயங்கரவாதக்
குழுவின் சில பலமான உறுப்பினர்கள் இலங்கைக்கு வந்து புத்தளம், வனாத்தவில்லு லெக்டோ தோட்டத்தில்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் திடடமிட்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அல்-கொய்தா பயங்கரவாத குழு மற்றும் வெளிநாட்டு பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக
கூறப்படும் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் பிரதான சந்தேக நபர்களிடம் மீண்டும் விசாரணை நடத்தியதில் இந்த உண்மைகள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தாக்குதலின் முக்கிய சந்தேக நபர்களில் ஒருவரான முஹம்மட் அப்துல்லா ஹக் மீண்டும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுக்கு மேலதிக விசாரணைகளுக்காக கடந்த 21 ஆம் திகதி அழைத்துச் செல்லப்பட்டு மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையிலிருந்து இவ்விடயம்
தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட அல்கைதா பயங்கரவாத குழுவின் அங்கத்தவரால் அளிக்கப்பட்ட சாட்சியங்களின்படி அந்நாட்டு அரசாங்கம் புலனாய்வு பிரிவுக்கு தெரிவித்துள்ள
அறிக்கையின்படி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாக செயல்பட்டவரென கூறப்படும் தற்போது பூஸா அதி உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரிடம் மீண்டும் விசாரணை செய்ய புலனாய்வு பிரிவினர், நீதிமன்றத்துக்கு விடயங்களை
தெரிவித்து கடந்த 21 ஆம் திகதி இதற்கான அனுமதியை பெற்றுக் கொண்டனர். அதன்படி நடத்தப்பட்ட விசாரணையின் போது 2018ஆம் ஆண்டு 05 பேரை கொண்ட அல்கொய்தாபயங்கரவாத குழுவொன்று இலங்
கைக்கு வந்து இலங்கையின் பல பிரதேசங்களில் ஆய்வு செய்து தாக்குதலுக்கான திட்டங்களை தயாரித்துள்ளமை தெரியவந்துள்ளது.