உணவகமொன்றில் 24 கரட் தங்கத்தூள் கலந்து உணவு பரிமாறப்படும் காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் அனைவர் கவனத்தையும் ஈர்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துபாயில் பேரங்காடியொன்றில் இயங்கிவரும் உணவகமொன்றிலேயே “தால் கஷ்கான்” என்ற இந்த தங்க உணவு பரிமாறப்படுகிறது.

புகழ்பெற்ற சமையல் கலை நிபுணரான ரன்வீர் பிரார் டுபாயில் நடத்திவரும் உணவகத்திலேயே பருப்புக்கறியில் தங்கத்தூள் கலந்து இந்த வித்தியாசமான உணவை பரிமாறுகின்றார்.
விசேடமாகத் தயாரிக்கப்படும் இந்தப் பருப்பு குழம்பானது ஒரு மரப்பெட்டியில் பிரத்யேகமாக கொண்டு வரப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு பரிமாறப்படுகிறது.
https://www.instagram.com/reel/C4DemsFPrSd/?utm_source=ig_web_copy_link

அதிலும் சிறப்பான அம்சம் என்னவென்றால் 24 காரட் தங்கத் தூளானது வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் கண் முன்பே கலக்கப்பட்டு, நெய்யுடன் பரிமாறப்படுகிறது.
இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வெகுவாக பரவி வருகின்ற நிலையில் இது தொடர்பாக பலரும் பலதரப்பட்ட கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த சிறப்பு உணவின் விலை இலங்கை மதிப்பில் சுமார் 4,800 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.