புதிய இணைப்பு
கனடாவில் ஒரே கும்பத்தை சேர்ந்தவர்களை கொலை செய்த வழக்கில், காவல்துறையினர் சந்தேகத்தின்பேரில் அவர்களுடன் ஒரே வீட்டில் இருந்த இலங்கையைச் சேர்ந்த பெப்ரியோ டீ சொய்சா என்ற 19 வயதான சிங்கள அனைத்துலக கற்கை மாணவனைக் கைது செய்துள்ளனர்.
முதல் இணைப்பு
கனடாவில் தெற்கு ஒட்டாவா புறநகர் பகுதியான பார்ஹேவனில் ஒரு தாய், அவரது நான்கு சிறு குழந்தைகள் மற்றும் ஒரு குடும்பத்திற்கு அறிமுகமானவர் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
அத்தோடு, உயிரிழந்தவர்களில் 5 பேர் இலங்கையிலிருந்து கனடாவுக்கு புதிதாக வந்தவர்கள் என காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.
இந்நிலையில், 35 வயதான தர்ஷனி டிலந்திகா ஏகன்யகே என்ற தாயும் அவரது பிள்ளைகளாகிய ஏழு வயது இனுகா விக்கிரமசிங்க, நான்கு வயது மகள் அஷ்வினி விக்கிரமசிங்க, இரண்டு வயது மகள் ரினியானா விக்கிரமசிங்க, மற்றும் இரண்டு மாத பெண் குழந்தை கெல்லி விக்கிரமசிங்க ஆகியோரே குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
அதேவேளை, ஏகன்யாக்காவின் கணவர் படுகாயமடைந்து தற்போது மருத்துவமனையில் சீரான நிலையில் உள்ளதாகவும் அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த கொடூர செயல் தொடர்பில் 19 வயதுடைய Febrio De-Zoysa, என்ற கனடாவில் மாணவராக இருந்ததாக நம்பப்படும் இலங்கைப் பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார்.