கேகாலை அலகல்ல மலையில் முகாமிட்டு திரும்பும் போது குன்றின் மீதிருந்து விழுந்த வடமேற்கு பல்கலைக்கழக மாணவனை, சுமார் இரண்டரை கிலோமீற்றர் மலை உச்சியில் ஏறி பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
வடமேற்கு பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தின் இரண்டாம் வருட மாணவரான கல்முனையைச் சேர்ந்த ஒரிங்டன் அன்ட்ராடோ என்ற மாணவனே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.
அதே பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தின் இரண்டாம் வருடத்தில் கல்வி கற்கும் 10 மாணவர்கள் கேகாலை அலகல்ல மலையில் ஒன்றாக முகாமிட்டிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை (10) காலை மீண்டும் மலையிலிருந்து இறங்கும் போது குறித்த மாணவர் மலையில் இருந்து கீழே விழுந்துள்ளார்.
கீழே விழுந்த மாணவனை மீட்க பெரகல இராணுவ முகாமின் அதிகாரிகள் குழு பெரும் முயற்சிகளை மேற்கொண்டு, பெரும் சிரமத்திற்கு மத்தியில் மாணவனை மீட்டனர்.
இந்தநிலையில் மீட்கப்பட்ட மாணவன் சிகிச்சைக்காக மாவனல்லை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளத்துடன், அவரின் உடல்நிலை நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.