கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இன்று (13) காலை முதல் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அரச பல்கலைக்கழக ஊழியர்கள் நேற்று (12) நண்பகல் முதல் ஓன்றரை நாள் போராட்டத்தை முன்னெடுப்பதாக அறிவித்ததன் அடிப்படையில் இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஏற்றுக்கொள்ளப்பட்ட 107% சம்பள அதிகரிப்பை பல்கலைக்கழக ஊழியர்களுக்கு வழங்கு,மாதாந்த இழப்பீட்டு தொகையை 75% ஆக அதிகரி மற்றும் 876 வது சுற்றுநிருவத்தை உடனே இரத்து செய் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கம் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
அதேசமயம் இன்று மாலை இந்த போராட்டம் நிறைவடையும் என்பதுடன் , இந்த பிரச்சனைகளுக்கான சாதகமான ஒரு தீர்வு கிடைக்கும் வரை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை செய்வதற்கு அனைத்து அரச பல்கலைக்கழக சம்மேளனம் தீர்மானம் எடுத்துள்ளதாக கிழக்கு பலக்லைக்கழக ஊழியர் சங்க தலைவர் ஏகாம்பரம் ஜெகராஜ் தெரிவித்துள்ளார்.