மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்சு வரலாற்றில் மிக நீண்ட பத்திரிகையாளர் சந்திப்பிற்கான புதிய உலக சாதனையைப் படைத்துள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை உலக பத்திரிகை சுதந்திர தினத்தைக் குறிக்கும் வகையில் மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் முய்சு சுமார் 15 மணி நேரம் நீண்ட ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தினார்.

காலை 10 மணிக்கு ஆரம்பமாகிய இந்த ஊடகவியலாளர் சந்திப்பு கிட்டத்தட்ட 15 மணி நேரம் நடைபெற்றுள்ளது.
ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ஜனாதிபதி முய்சு பத்திரிகையாளர்களிடமிருந்து பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்ததுடன் ஊடகங்கள் மூலம் சமர்ப்பிக்கப்பட்ட பொது கேள்விகளுக்கு பதிலளித்தார் என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் முந்தைய சாதனையை மாலைதீவு ஜனாதிபதி முறியடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.