பாதாள உலக செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களுக்கு புரியும் மொழியில் பதில் வழங்குவதற்கு தயார் என காவல்துறை மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
அம்பலாங்கொடை மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களில் அண்மையில் இடம்பெற்ற பாதாள உலகக் குழுவினரின் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் பல அப்பாவிகள் பலியாகியுள்ளனர்.
தற்போது நடைமுறையில் உள்ள பாதுகாப்பு வேலைத்திட்டத்தில் மாற்றம் தேவையென்றால் அதற்கும் தயங்கப் போவதில்லை எனவும் காவல்துறை மா அதிபர் தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கையில் கடந்த சில தினங்களில் துப்பாக்கிசூட்டு சம்பவங்கள் திடீரென அதிகரித்து உயிரிழப்புகள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.