ஸ்பெயினில், பிளேஸ்டேஷன் 5 கன்ட்ரோலரைப் பயன்படுத்தி “ஸ்பெர்ம் ரோபோ” மூலம் கருத்தரிக்கப்பட்ட குழந்தைகள் வெற்றிகரமாகப் பிறந்துள்ளன. விந்தணுவை ஊசி மூலம் செலுத்தும் ரோபோக்களை பார்சிலோனா பொறியாளர்கள் மேம்படுத்தினர்.
அவை அமெரிக்காவின் நியூயார்க் நகர கிளினிக்கிற்கு அனுப்பிவைக்கப்பட்டநிலையில் அந்த ரோபோக்களைப் பயன்படுத்தி விந்தணு செலுத்தப்பட்டு உருவான முதல் 2 பெண் குழந்தைகள் எவ்வித சிக்கலுமின்றி பிறந்தன. இதன் மூலம் செயற்கை கருத்தரிப்பு முயற்சிக்கு பயன்படும் இன்-விட்ரோஃபெர்டிலைசேஷன் சிகிச்சையை மிகக்குறைந்த கட்டணத்தில் பெண்கள் பயன்படுத்த இயலும்.