Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையில் பயணிகள் ட்ரோன் சேவை; செப்டெம்பரில் முன்னோடித் திட்டம்!

இலங்கையில் பயணிகள் ட்ரோன் சேவை; செப்டெம்பரில் முன்னோடித் திட்டம்!

2 months ago
in செய்திகள், தொழில்நுட்பம்

இலங்கையில் பயணிகளை ஏற்றிச் செல்லும் ட்ரோன் சேவைக்கான முன்னோடித் திட்டம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ருவன் கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.

ஆரம்ப கட்டமாக 25 கிலோமீற்றர் வரையான தூரங்களுக்கு பயணிகள் ட்ரோன்களை இயக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக சுற்றுலாத் தலங்களை இணைக்கும் இரண்டு சாத்தியமான விமானப் பாதைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.

முதற்கட்ட சோதனைகளில் கொழும்பு – தென் கடற்கரை, கட்டுநாயக்க மற்றும் போர்ட் சிட்டி ஆகிய பகுதிகளை இணைக்கும் பாதைகள் குறித்து ஆராயப்படவுள்ளதாக பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக இரண்டு பயணிகள் ட்ரோன்கள் செப்டெம்பர் மாதம் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சோதனைத் திட்டத்தின் முதல் இரண்டு மாதங்களில் ட்ரோன்களின் இயக்கத்திறன், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, அதனடிப்படையில் பொருத்தமான விமானப் பாதைகள் உருவாக்கப்படவுள்ளன.

இந்தத் திட்டம் முதன்மையாக நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படுகின்றது. அதேவேளை, அவசரகால மற்றும் அனர்த்த மீட்புப் பணிகள், கடல்சார் மற்றும் கடற்படை நடவடிக்கைகளிலும் பயணிகள் ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படுகின்றன.

பயணிகள் ட்ரோன்கள் புறப்படுவதற்கும் தரையிறங்குவதற்கும் ஒப்பீட்டளவில் குறைந்த இடமே தேவைப்படுவது அவற்றின் முக்கிய நன்மைகளில் ஒன்றாகும் என பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆரம்பகட்ட சோதனைகள் நிறைவடைந்த பின்னர் ஆறு மாதங்களுக்குள் இலங்கையில் பயணிகள் ட்ரோன் சேவையை வணிக ரீதியாக ஆரம்பிப்பதே அரசாங்கத்தின் இலக்கு எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

”மட்டு திராய்மடுவில் பொலிசாரின் ஆதரவுடன் கசிப்பு விற்பனை!”; பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
செய்திகள்

”மட்டு திராய்மடுவில் பொலிசாரின் ஆதரவுடன் கசிப்பு விற்பனை!”; பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

October 4, 2026
இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்த 9 இந்திய மீனவர்கள் கைது
செய்திகள்

இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்த 9 இந்திய மீனவர்கள் கைது

October 4, 2026
கல்முனையில் புதிய தீவிரவாதத் தலைமை?; சம்பிக்க ரணவக்கவிடம் விசாரணை நடத்தக் கோரிக்கை
செய்திகள்

கல்முனையில் புதிய தீவிரவாதத் தலைமை?; சம்பிக்க ரணவக்கவிடம் விசாரணை நடத்தக் கோரிக்கை

October 4, 2026
20% கட்டண உயர்வை எதிர்பார்க்கும் எரிபொருள் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம்
செய்திகள்

20% கட்டண உயர்வை எதிர்பார்க்கும் எரிபொருள் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம்

October 4, 2026
யாழில் ஹெட்செட் அணிந்து தண்டவாளத்தில் படுத்திருந்தவர் – கை, கால்களை இழந்த சோகம்
செய்திகள்

யாழில் ஹெட்செட் அணிந்து தண்டவாளத்தில் படுத்திருந்தவர் – கை, கால்களை இழந்த சோகம்

October 4, 2026
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு அழைத்துவரப்பட்டார் ஞானசார தேரர்
செய்திகள்

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு அழைத்துவரப்பட்டார் ஞானசார தேரர்

October 4, 2026
Next Post
ஈரானுக்கு எதிராக கடும் பொருளாதார நடவடிக்கை; ட்ரம்ப் எச்சரிக்கை!

ஈரானுக்கு எதிராக கடும் பொருளாதார நடவடிக்கை; ட்ரம்ப் எச்சரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு