Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை வானொலி சேவையை டிஜிட்டல் மயமாக்க திட்டம்!

இலங்கை வானொலி சேவையை டிஜிட்டல் மயமாக்க திட்டம்!

2 years ago
in முக்கிய செய்திகள்

இலங்கை வானொலி சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பில் தொலைத்தொடர்பு ஒழுக்குப்படுத்தல் ஆணைக்குழு அவதானம் செலுத்தியுள்ளது.

உலகிலுள்ள பல நாடுகளில் FM அலைவரிசைகளின் பயன்பாடு குறைவடைகின்ற நிலையிலேயே இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுக்குப்படுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி கொழும்பு தாமரை கோபுரத்தின் ஊடாக வானொலி சேவைகளை டிஜிட்டல் மயமாக்கி கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளுக்கு முதற்கட்டமாக வானொலி டிஜிட்டல் சேவையை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

FM அலைவரிசை இல்லாது செய்யப்பட்டு வானொலி டிஜிட்டல் சேவை VHF அலைவரிசை ஊடாக ஒலிபரப்பப்படவுள்ளது.

டிஜிட்டல் வானொலி சேவையை ஆரம்பிப்பதற்கு தேவையான முதலீட்டை உள்நாட்டு முதலீட்டின் ஊடாக முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தற்போது பயன்படுத்தப்படும் FM வானொலிகளை நவீனமயப்படுத்த மேம்பாட்டு நவீன கட்டமைப்பொன்று பொருத்தப்பட வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் FM அலைவரிசைகள் முடிவடைந்துள்ளதாகவும் இதுவரை 54 வானொலிகளுக்கு FM அலைவரிசைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தொலைத்தொடர்பு ஒழுக்குப்படுத்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

டிஜிட்டல் வானொலி சேவைக்கான அனுமதி பத்திரம் வழங்கப்பட வேண்டும் எனவும் அதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தொலைத்தொடர்பு ஒழுக்குப்படுத்தல் ஆணைக்குழுவின் பதில் பணிப்பாளர் நாயகம் ஹேலசிரி ரணதுங்க தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் வானொலியை ஆரம்பிப்பதற்கான வசதிகள் கொழும்பு தாமரை கோபுரத்தில் உள்ளமையினால் அந்த இடத்திலிருந்தே டிஜிட்டல் வானொலியை ஆரம்பிக்க முடியும் என அவர் குறிப்பிடுகின்றார்.

டிஜிட்டல் வானொலி ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் அலைவரிசைகளை வழங்குவது குறித்து கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருவதாக ஆணைக்குழுவின் பதில் பணிப்பாளர் நாயகம் ஹேலசிரி ரணதுங்க தெரிவிக்கின்றார்.

தொடர்புடையசெய்திகள்

மட்டு நகரில் தேசிய வெசாக் வாரத்தினை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள்
செய்திகள்

மட்டு நகரில் தேசிய வெசாக் வாரத்தினை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள்

May 12, 2025
87 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பறிமுதல்
செய்திகள்

87 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பறிமுதல்

May 12, 2025
இந்தோனேசியாவில் மூழ்கிய கப்பல்; பலர் உயிரிழப்பு
உலக செய்திகள்

இந்தோனேசியாவில் மூழ்கிய கப்பல்; பலர் உயிரிழப்பு

May 12, 2025
ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு
செய்திகள்

ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

May 12, 2025
தமிழ் இன அழிப்பு வாரம் இன்று மட்டு சத்துருக்கொண்டான் நினைவுத்தூபி அருகில் ஆரம்பம்
காணொளிகள்

தமிழ் இன அழிப்பு வாரம் இன்று மட்டு சத்துருக்கொண்டான் நினைவுத்தூபி அருகில் ஆரம்பம்

May 12, 2025
மட்டு சிறையிலிருந்து 15 கைதிகள் பொது மன்னிப்பில் விடுதலை
காணொளிகள்

மட்டு சிறையிலிருந்து 15 கைதிகள் பொது மன்னிப்பில் விடுதலை

May 12, 2025
Next Post
வரிசை யுகத்துக்கு முடிவு கட்டிய ஜனாதிபதியின் தலைமைத்துவம்: ரவி கருணாநாயக்க புகழாரம்!

வரிசை யுகத்துக்கு முடிவு கட்டிய ஜனாதிபதியின் தலைமைத்துவம்: ரவி கருணாநாயக்க புகழாரம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.