குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் இருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலியான கடவுச்சீட்டுகளை வழங்கிய குற்றச்சாட்டில் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்கள், சேவையில் உள்ள பிரதிக் கட்டுப்பாட்டாளர் மற்றும் முன்னாள் பிரதிக் கட்டுப்பாட்டாளர் என தெரியவந்துள்ளது.
குறித்த இருவரும் பாதாள உலகத்துடன் தொடர்புடைய நபர்களுக்கு மோசடியான பயண ஆவணங்களை வழங்குவதில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தக் கடவுச்சீட்டுகளை பெற்றவர்களான கூறப்படும்வர்களில் ஹினட்டியான மகேஷ் என அழைக்கப்படும் நுரேஷ் சுபுன் தயாரத்ன மற்றும் மத்துகம ஷான் என அழைக்கப்படும் ஷான் அரோஷ் லியனகே ஆகியோர் அடங்குவதாக தெரியவந்துள்ளனர்.
போலி ஆவணங்களுடன் தொடர்புடைய குற்றச் செயல்களை எதிர்த்து போராடுவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் தற்போதைய முயற்சிகளில் இந்த கைதுகள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள வலையமைப்பினை வெளிக்கொண்டு வருவதற்கு அதிகாரிகள் இந்த விடயம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொள்வார்கள் என கூறப்படுகின்றது.