இந்நாட்களில் கடும் வெப்பம் நிலவுவதால் தோல் நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
சூரிய ஒளி நேரடியாக சருமத்தின் மீது படுவதால், தோலில் சில மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்றும், தோல் எரியும் தன்மையை இங்கு காணலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதன்படி, தோலில் வெள்ளைப் புள்ளிகள் இருப்பது, தோல் அரிப்பு, வியர்வையால் சீழ் கொப்புளங்கள், வியர்வை தேங்கி மார்பகங்களில் உருண்டை வடிவ பூஞ்சை போன்றவை இந்த தொற்று நிலைகளாக அடையாளம் காணப்படுகின்றன.
இதனால் சிறு குழந்தைகள் உட்பட பாடசாலை மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும், இது குறித்து மருத்துவ ஆலோசனை பெறுவது கட்டாயம் என்றும் தோல் மருத்துவ நிபுணர் டாக்டர் இந்திரா கஹவிட தெரிவித்தார்.