Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பௌத்த மதத்துடன் ஏற்பட்ட மாற்றமானது இலங்கை மக்கள் நாகரீகமான தேசமாக மாற உதவியது; ஜனாதிபதி அநுர

பௌத்த மதத்துடன் ஏற்பட்ட மாற்றமானது இலங்கை மக்கள் நாகரீகமான தேசமாக மாற உதவியது; ஜனாதிபதி அநுர

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பௌத்த மதத்துடன் ஏற்பட்ட மாற்றமானது இலங்கை மக்கள் நாகரீகமான தேசமாக மாற உதவியது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க மிஹிந்தலை விகாரையில் இன்று (10) நடைபெற்ற தேசிய பொசொன் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

“பௌத்த தர்மத்தால் முழு உலகமும் ஒளிரட்டும்” என்ற தொனிப்பொருளின் கீழ், இம்முறை, தேசிய பொசொன் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இது குறித்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை தேசத்தை நாகரிக மாற்றத்திற்கு இட்டுச் சென்ற மகிந்த தேரரின் வருகை மற்றும் மிஹிந்தலையை மறந்துவிட்டு, தேசிய பொசொன் நிகழ்வை கொண்டாட முடியாது.

எனவே, இவ்வாறான ஆன்மீக விழுமியங்களைக் கொண்ட நிலத்தைப் பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்காகப் பாதுகாப்பது ஒரு அரசின் பொறுப்பாகும்.

இந்தப் பொறுப்பை பூமியுடன் உணர்வுபூர்வமான தொடர்புடைய பிரஜைகளால் மாத்திரமே நிறைவேற்ற முடியும். அநுராதபுர நகரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மஹிந்த தேரரின் இலங்கை வருகையுடன் நமது நாடு தேரவாத பௌத்த தத்துவம் மற்றும் பாரம்பரியத்தின் மையமாக மாறியது. சமூக மாற்றத்திற்கும் ஆன்மீக விழிப்புணர்வுக்கும் வழிவகுத்த இந்த அற்புதமான நிகழ்வு, வெறும் மத அர்த்தத்தைத் தாண்டி, கலாசாரம், சமூகம் மற்றும் அரசியல் உட்பட நமது நாட்டின் அனைத்து அம்சங்களிலும் மிகவும் மேம்பட்ட கட்டமைப்பை உருவாக்குவதில் வெற்றி பெற்றுள்ளது.

அந்த சமூகத்தை மீண்டும் இந்த பூமியில் நிலைநிறுத்துவதன் மூலம் நாட்டிற்கு அவசியமான சமூக மற்றும் சுற்றாடல் நெறிமுறை சார்ந்த புதிய மனப்பான்மையுடன் கூடிய நவீன நாகரீக அரசை கட்டியெழுப்புவதற்கான கைவிட முடியாத பொறுப்பை நிறைவேற்றுவேன்.

இலங்கையின் முதல் நகரம், முதல் குளம், முதல் அறுவை சிகிச்சைத் தளம் மற்றும் யோத கால்வாய் போன்ற பாரம்பரியங்களைக் கொண்ட அநுராதபுரத்தை அதன் பண்டைய பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வகையில் புனரமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்திய உதவியின் கீழ் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள இந்தியப் பிரதமர் ஏற்கனவே இணக்கம் தெரிவித்துள்ளார்.

எந்த தேசமும் நிலைத்து நிற்க வலுவான அடித்தளம் தேவை. புத்தரின் தத்துவத்தின் மூலம் இலங்கை மக்கள் அத்தகைய வலுவான அடித்தளத்தைப் பெற்றுள்ளனர். கல்வியில் பின்னடைந்த சமுதாயத்தில் வலிமையான பிரஜைகளை எதிர்பார்க்க முடியாது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பௌத்தம் இந்நாட்டில் கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்தியது. விகாரைகளைப் பிரிவெனாக்களாக மாற்றுவதன் மூலம், இந்நாட்டு மக்களுக்கு ஆன்மீகத்தையும் அறிவையும் வழங்கும் சமூக நோக்கத்தை நிறைவேற்றுவதில் பௌத்தம் பெரும் பங்காற்றியது.

இது ஒரு நாகரீக சமூக பொறிமுறையின் தோற்றத்திற்கு வழிவகுத்தது. அதற்காக 2500 ஆண்டுகால வரலாற்றில் இந்நாட்டில் செயற்பட்ட தேரர்கள் அனைவருக்கும் நாம் நன்றியுடன் இருக்க வேண்டும்.

ஆனால் இப்போது அந்தச் சமூகப் பொறிமுறை வீழ்ச்சியடைந்து விட்டது. சில பொலிஸார் குற்றவாளிகளை பாதுகாக்கும் நிலையில் உள்ளனர். குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் சில அதிகாரிகள் சட்டவிரோத கடவுச்சீட்டுகளை வழங்கும் நிலை தோன்றியுள்ளது.

பாதாள உலகத் தலைவர்களுக்கு விமானப் பயணச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. சிறைச்சாலைகள் திணைக்களத்தில் உள்ள சிலர் சட்டவிரோதமாக கைதிகளை விடுவித்துள்ளனர். போக்குவரத்துத் திணைக்களத்தில் உள்ள சில அதிகாரிகள் சட்டவிரோத செயல்களைச் செய்துள்ளனர்.

இந்த நிறுவனங்கள் குறித்து பிரஜைகள் மகிழ்ச்சியான மனநிலையில் இல்லை. எனவே, பிரஜைகளின் பிரஜைப் பொறுப்பை உருவாக்க நெறிமுறை சார் திட்டம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். இதற்கான வழிகாட்டுதலை இந்தப் பௌத்த தத்துவத்தின் மூலம் பெறலாம்.

ஒரு நெறிமுறை சார்ந்த தேசமாக, இந்த அரச நிறுவனங்களின் பின்னடைவை மீண்டும் மீட்டெடுக்க நாம் செயற்பட்டு வருகிறோம்.இந்த பணியை கைவிடாமல் நிறைவேற்ற, சாதாரண குடிமக்களின் ஆதரவும் நமக்கு அவசியம். இந்த வீழ்ச்சியடைந்த யுகத்தை முடிவுக்கு கொண்டு வந்து, பௌதிக மற்றும் ஆன்மீக ரீதியாக மேம்பட்ட வாழ்க்கைத் தரத்திற்கு இந்த நாட்டை மாற்றும் பொறுப்பைக் கைவிடாமல் நிறைவேற்ற, சாதாரண மக்களும் ஒன்றுபட வேண்டும் என்றார்.

இரண்டு வருடங்களாக அரச அனுசரணையுடன் தேசிய பொசொன் நிகழ்வை நடத்த முடியாமல் இருந்த நிலையில், இது தொடர்பில் தீர்க்கமான முடிவை எடுத்து மிஹிந்தலையில் தேசிய பொசொன் நிகழ்வை நடத்தியதற்காக மிஹிந்தலை ரஜமகா விகாரையின் விகாராதிபதி கலாநிதி வலவாஹெங்குனுவெவே தம்மரதன தேரர், ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார்.

மிஹிந்தலை விகாரவாசி வண, சுருக்குளமே இந்திரரதன தேரரால் வரவேற்பும், நோக்கம் தொடர்பான விளக்கமும் வழங்கப்பட்டது.

மிஹிந்தலை ரஜமஹா விகாராதிபதி கலாநிதி வலவாஹெங்குணவெவே தம்மரதன தேரர், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி, அமைச்சர் வசந்த சமரசிங்க, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்க, பிரதி அமைச்சர் சுசில் ரணசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான சேன நாணாயக்கார, திலின தாருக சமரகோன், பாக்ய ஸ்ரீ ஹேரத், அநுராதபுரம் மாவட்ட செயலாளர் ரஞ்சித் விமலசூரிய மற்றும் பெருந்திரளான மக்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Tags: Battinaathamnewsinternationalnewsmattakkalappuseythikal

தொடர்புடையசெய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் முன்மொழிவுக்கு சட்டத்தரணிகள் சங்கத்தின் தீர்மானம்
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் முன்மொழிவுக்கு சட்டத்தரணிகள் சங்கத்தின் தீர்மானம்

July 29, 2026
42 ஆயிரம் ஹெக்டேர் காடுகள் சாம்பல்; பிரான்ஸில் பெரும் காட்டுத்தீயால் பரபரப்பு!
செய்திகள்

42 ஆயிரம் ஹெக்டேர் காடுகள் சாம்பல்; பிரான்ஸில் பெரும் காட்டுத்தீயால் பரபரப்பு!

July 29, 2026
இலங்கை அரச மருத்துவமனையொன்று அறவிடும் பரிசோதனை விலை விபர பட்டியல்
செய்திகள்

இலங்கை அரச மருத்துவமனையொன்று அறவிடும் பரிசோதனை விலை விபர பட்டியல்

July 29, 2026
கிண்ணியாவில் 43 பேருக்கு காணி உரிமங்கள்; புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.80 இலட்சம் நிவாரணம்!
செய்திகள்

கிண்ணியாவில் 43 பேருக்கு காணி உரிமங்கள்; புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.80 இலட்சம் நிவாரணம்!

July 29, 2026
இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிர்ப்பு; கறுப்புக்கொடி ஏந்தி கடலில் போராட்டம்!
செய்திகள்

இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிர்ப்பு; கறுப்புக்கொடி ஏந்தி கடலில் போராட்டம்!

July 29, 2026
மட்டக்களப்பில் 71 குடும்பங்களுக்கு வீடமைப்பு புனரமைப்பு நிதி உதவி
காணொளிகள்

மட்டக்களப்பில் 71 குடும்பங்களுக்கு வீடமைப்பு புனரமைப்பு நிதி உதவி

July 29, 2026
Next Post
மறு அறிவிப்பு வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்; வளிமண்டலவியல் திணைக்களம்

மறு அறிவிப்பு வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்; வளிமண்டலவியல் திணைக்களம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.