Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யானை தாக்குதலில் இருவர் உயிரிழப்பு; மட்டக்களப்பில் சம்பவம்!

யானை தாக்குதலில் இருவர் உயிரிழப்பு; மட்டக்களப்பில் சம்பவம்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

ஏறாவூர் பற்று பிரதேச செயலகப் பிரிவு ஈரளக்குளத்தில் சனிக்கிழமை(16) இரவும், கிரான் பிரதேச செயலக பிரிவு திகிலி வெட்டையில் ஞாயிற்றுக்கிழமை (17) அதிகாலையும் காட்டு யானை தாக்கி இருவர் மரணமடைந்துள்ளனர்.

இரு வெவ்வேறு பிரதேச செயலகப் பிரிவுகளிலும் நடைபெற்ற மரணத்திற்கான மரண விசாரணைகளை, திடீர் மரண விசாரணை அதிகாரிகளான எம்.எஸ்.எம்.நஸீர், கே. பவளகேசன் ஆகியோர் கரடியனாறு மற்றும் சந்திவெளி பொலிஸாருடன் சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று மேற்கொண்டுள்ளனர் .

ஆவெட்டியாவெளியில் மாடு வளர்ப்பில் ஈடுபட்ட, சித்தாண்டியை சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான பத்மநாதன் மோகனதாஸ் (வயது 45) என்பவர் சனிக்கிழமை (16), மாலை உறவினர் ஒருவரின் வீட்டுக்கு சென்று, பண்ணையை நோக்கி இரவு 09 மணியளவில் நடந்து செல்லும்போது ஈரளக்குளத்தில் வீதியோரமாக நின்ற யானையொன்றின் தாக்குதலுக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அத்துடன், திகிலிவெட்டை, குளத்துவெட்டையை சேர்ந்த நாகராசா முரளிதரன் (வயது 31) என்ற ஒரு பிள்ளையின் தந்தையான நபர், நண்பர் ஒருவருடன் நள்ளிரவில் , வலைவீசி மீன் பிடிக்கச் சென்று அதிகாலை குளத்தின் ஓரமாக இருந்த மதுரை மரத்தின் கீழ் படுத்துறங்கிய போது யானையின் தாக்குதலுக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே மரணித்துள்ளார்.

இரு சடலங்களும் உடற்கூற்று பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மற்றும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

பணிப்புறக்கணிப்பு நடுவேயும் பெரும்பாலான ரயில் சேவைகள் வழமைபோல் இயக்கம்; புகையிரத திணைக்களம்!
செய்திகள்

பணிப்புறக்கணிப்பு நடுவேயும் பெரும்பாலான ரயில் சேவைகள் வழமைபோல் இயக்கம்; புகையிரத திணைக்களம்!

September 18, 2026
வாகன விலைகள் கணிசமாகக் குறைவு; இறக்குமதியாளர்கள் சங்கம் தகவல்!
செய்திகள்

வாகன விலைகள் கணிசமாகக் குறைவு; இறக்குமதியாளர்கள் சங்கம் தகவல்!

September 18, 2026
நாமல் ராஜபக்ஷ மீண்டும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில்!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷ மீண்டும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

September 18, 2026
மட்டக்குளி விபத்து – “கார் தானாகவே வேகம் அதிகரித்தது” என ஓட்டுநர் வாதம்!
செய்திகள்

மட்டக்குளி விபத்து – “கார் தானாகவே வேகம் அதிகரித்தது” என ஓட்டுநர் வாதம்!

September 18, 2026
சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய குடிவரவு திணைக்கள உதவி கட்டுப்பாட்டாளர் கைது!
செய்திகள்

சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய குடிவரவு திணைக்கள உதவி கட்டுப்பாட்டாளர் கைது!

September 18, 2026
இலங்கையின் முதலாவது மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு இன்று திறப்பு!
செய்திகள்

இலங்கையின் முதலாவது மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு இன்று திறப்பு!

September 18, 2026
Next Post
சாதாரண மட்டத்தை விட அதிகரிக்கும் வெப்பநிலை; முகப்புத்தகத்தில் வைரலாகும் எச்சரிக்கை பதிவு!

சாதாரண மட்டத்தை விட அதிகரிக்கும் வெப்பநிலை; முகப்புத்தகத்தில் வைரலாகும் எச்சரிக்கை பதிவு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு