சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு லியோ கழக்கமும், மட்டக்களப்பு லேடி லயன்ஸ் கழக்கமும் இணைந்து நேற்றைய தினம் (17) இச் சமுகத்தில் பெண்களின் பங்களிப்பை பறைசாற்றும் நோக்கில் ”அவள் தனித்துவமானவள்” எனும் தலைப்பில் மாபெரும் நடைபவனி நிகழ்வொன்று இடம்பெற்றது.
இவ் நடைபவனியானது மட்டக்களப்பு காந்தி பூங்காவில் ஆரம்பித்து கல்லடி பாலம் வரை இடம்பெற்றது.இதில் மட்டு லியோ கழக உறுப்பினர்கள், லேடி லயன்ஸ் கழக உறுப்பினர்கள்,பாடசாலை லியோ கழக உறுப்பினர்கள், ஏனைய கழகங்கள் நிறுவனங்கள் மற்றும் மட்டக்களப்பு முதலுதவி சேவைக்கென மாவட்ட திரிசாரணர்கள் குழாம் ஆகியோர் கலந்துகொண்டர்.
பின்னர் இதில் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. J. J. முரளிதரன் அவர்களும் கெளரவ அதிதியாக சுவாமி விபுலனந்தர் கற்கைகள் நிறுவகம் கிழக்கு பல்கலைக்கழகத்தின் பணிப்பாளர் பேராசிரியர். புளோரன்ஸ் பாரதி கென்னடி அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக பேராசிரியர்.Dr.சுரேஷ் பிரபா மட்டக்களப்பு லேடி லயன்ஸ் கழக உறுப்பினர், இயற்கையின் மொழி மட்டக்களப்பு இந்து மகளிர் மன்றத் தலைவி திருமதி.காயத்ரி உதயகுமார் மற்றும் கவின் கலாலய நடன ஆசிரியை திருமதி.தாரகி மயூரன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
குறித்த நிகழ்வின் ஓர் அங்கமாக நடனம்,பாடல்,பெண்களின் தனித்துவத்தை பற்றிய பேச்சு மற்றும் வருகை தந்த அதிதிகளுக்கும் கழக உறுப்பினர்களுக்கும் நினைவுச்சின்னம் வழங்கியத்தோடு பின்னர் செயற்திட்ட தலைவர்.ர.பிரஜன்னியா அவர்களால் நன்றியுரை கூறப்பட்டு இனிதே நிறைவடைந்தது.