மட்டக்களப்பு – மயிலத்தமடு மாதவனை பிரச்சினைக்கு தீர்வை வழங்குமாறு கோரி ஜனாதிபதியை வலியுறுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு – ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் இந்த வழக்கு நேற்று(18) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்படவிருந்த நிலையில், நீதவான் மன்றுக்கு வருகை தராமையால் வழக்கின் தீர்ப்பை 2 நாட்களுக்கு ஒத்திவைக்க ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற பதில் நீதவான் வி.தியாகேஸ்வரன் உத்தரவிட்டுள்ளார்.
அதற்கமைய வழக்கின் தீர்ப்பு நாளை (20) வழங்கப்படவுள்ளது.
கடந்த ஒக்டோபர் 8ஆம் திகதி மட்டக்களப்பு செங்கலடி பகுதிக்கு ஜனாதிபதி வருகை தந்த சந்தர்ப்பத்தில் மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பிரச்சினைக்கு தீர்வு கோரி வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், பண்ணையாளர்கள் , சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 37 பேருக்கு எதிராக வழங்கு தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.