அறுவை சிகிச்சையில் வயிற்றில் சுமார் 32 சென்டிமீட்டர் நீளமுள்ள உயிருள்ள மீன் ஒன்று நெளிவதைக் கண்டு மருத்துவர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.
வியட்நாமின் வடக்கு குவாங் நின் பகுதியில் 34 வயதுடைய நபருக்கு கடுமையான வயிற்றுப் பிடிப்பு ஏற்பட்டதை அடுத்து அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. அவரது புகார்களைத் தொடர்ந்து ஹை ஹா மாவட்ட மருத்துவ மையத்தின் மருத்துவர்கள் நோயைக் கண்டறிய எக்ஸ்ரே மற்றும் அல்ட்ராசவுண்ட் ஆகியவற்றை நடத்தினர்.
ஸ்கேன் செய்ததில் அவரது வயிற்றில் ஒரு பொருள் இருப்பது தெரியவந்தது, இதனால் பெரிடோனிடிஸ் எனப்படும் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டது. வயிற்றில் சிக்கிய மர்மப் பொருளை அகற்ற அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அறுவை சிகிச்சையில் அந்த மனிதனின் வயிற்றில் சுமார் 32 சென்டிமீட்டர் நீளமுள்ள உயிருள்ள மீன் ஒன்று நெளிவதைக் கண்டு மருத்துவர்கள் ஆச்சரியமடைந்தனர். அவரது மலக்குடல் வழியாக மீன் உடலுக்குள் நுழைந்ததாக ஊகிக்கப்படுகிறது. பெருங்குடலுக்கு மீன் பயணித்தது. இதனால் குடலில் ஒரு துளை ஏற்பட்டது.
மருத்துவர்களின் நுட்பமான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக இருந்தது. மருத்துவர்கள் மற்றும் குடும்பத்தினரின் கண்காணிப்பில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.
ஒருவரின் வயிற்றில் விலாங்கு மீன் உயிருடன் இருப்பது இன்னும் மர்மமாகவே உள்ளது. விலாங்கு மீன் உடலுக்குள் உயிருடன் இருப்பதும், அறுவை சிகிச்சைக்குப் பிறகு அதை உயிருடன் வெளியே எடுப்பதும் மருத்துவக் குழுவினரை மேலும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.