தெற்காசியாவின் மிகப் பெரிய மகப்பேறு வைத்தியசாலையாக காலி கராப்பிட்டியவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மன் – இலங்கை நட்புறவு புதிய மகளிர் வைத்தியசாலையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நாளை மறுதினம் (27) திறந்து வைக்கப்படவுள்ளது.
ஆறு மாடிகளைக் கொண்ட இந்த மருத்துவமனையில் அறுநூறு படுக்கைகள், ஆறு அறுவை சிகிச்சை அரங்குகள் உள்ளதாகவும், அவசர சிகிச்சைப் பிரிவுகள், தீவிர சிகிச்சைப் பிரிவுகள், ஆய்வகங்கள், சிசு தீவிர சிகிச்சைப் பிரிவுகள், சிறப்பு குழந்தைகள் பிரிவுகள் உள்ளிட்ட அனைத்து நவீன மருத்துவ வசதிகளும் உள்ளதாக மருத்துவமனை பணிப்பாளர் பி. விமலசேன தெரிவித்தார்.
இதற்காக ஜேர்மன் அரசாங்கம் வழங்கிய கடன் உதவித் தொகை இருபத்தைந்து மில்லியன் யூரோக்கள். (ரூ. 357 கோடி) என் தெரிவிக்கப்படுகிறது.