ஜப்பானின் மத்திய பகுதியில் இன்று (05.05.2023) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
ஜப்பானின் பிரதான தீவான ஹொன்ஷூவின் மத்திய மேற்கு கடற்கரைக்கு அருகில் உள்ள இஷிகாவா மாகாணத்தில் மதியம் 2:42 pm மணிக்கு (0542 GMT) 10 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபலமான சுற்றுலா தளமான நாகானோ மற்றும் கனாசாவா இடையே ஷிங்கன்சென் விரைவு தொடருந்து சேவைகள் நிறுத்தப்பட்டடுள்ளன.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள் மற்றும் சேதங்கள் குறித்து இதுவரை எந்தவித தகவலும் வெளியாகவில்லை.