எதிர்வரும் ஜுலை மாதம் பேருந்து கட்டணங்கள் கணிசமாக அதிகரிக்கப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று (01) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் சிங்கள புத்தாண்டில் டீசல் விலை குறைக்கப்படும் என நம்புகின்றோம்.

குறிப்பாக ஜூலை, ஜூன் மற்றும் ஏப்ரல் மாத இறுதியில் ஒவ்வொரு ஆண்டும் பேருந்து கட்டணம் மாறுகிறது.
எனவே, எந்தக் குறைப்பு இருந்தாலும், ஜூலை மாதத்தில் பேருந்துக் கட்டணம் கணிசமாக அதிகரிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.