காசாவில் நிரந்தர யுத்த நிறுத்தம் கோரி அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட யோசனை நேற்று 25 சர்வதேச பாதுகாப்பு சபையில் நிறைவேறியுள்ளது.
அமேரிக்கா இந்த யோசனையை கொண்டு வந்தாலும் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. அத்தோடு இஸ்ரேலும் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
14 நாடுகள் இந்த யோசனைக்கு ஆதரவாக்க வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம் அமேரிக்கா கொண்டுவந்த யுத்த நிறுத்த யோசனை குறுகிய நோக்க சிந்தனைகளுடன் இருப்பதாக கூறி சீனா மற்றும் ரஷ்யா என்பன தங்களது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அதனை இரத்து செய்திருந்தன. எனவே அமேரிக்கா நேற்று இரண்டாவது தடவையாக இந்த யோசனையை முன்வைத்திருந்தது.