Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஏறாவூர் பிரதேசத்தில் 225 குடும்பங்களுக்கு புனித நோன்பினையொட்டி பேரீச்சம் பழப்பொதிகள் வழங்கும் நிகழ்வு!

ஏறாவூர் பிரதேசத்தில் 225 குடும்பங்களுக்கு புனித நோன்பினையொட்டி பேரீச்சம் பழப்பொதிகள் வழங்கும் நிகழ்வு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

முன்னாள் ஜனாதிபதிகள் ஐந்து பேரது நடை, உடை, பாவனைகள தற்போது விமர்சிக்கின்ற அனுரகுமார திசாநாயக்க அந்த ஐந்து ஜனாதிபதிகளின் அதிகார காலத்தில் அவர்களை ஆதரித்ததை மறந்துவிட்டு இப்போது பேசுவது வேடிக்கையாகவுள்ளதென ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளர் ஏ.எம்.எம் பிர்தௌஸ் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் (28) மட்டக்களப்பு- ஏறாவூர்ப்பிரதேசத்தில் 225 குடும்பங்களுக்கு புனிதநோன்பினையொட்டி பேரீச்சம் பழப்பொதிகளை வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

தமிழ் மக்களின் உரிமைக்கான ஆயுதப்போராட்டம் நடைபெறமுன்னர் ஜேவிபியினரே ஆயுதம் ஏந்தி உமது நாட்டின் பொருளாதாரத்தையும் சொத்துக்களையும் சீரழித்ததை மறந்துவிடமுடியாது. எனவே பொதுமக்கள் ஜேவிபியினருக்கு வாக்களித்து பாரிய தவறுகளைச் செய்துவிடவேண்டாம்.

நாட்டை கட்டியெழுப்பிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை மீண்டும் ஜனாதிபதியாகத் தெரிவு செய்வதன் மூலமாக நாட்டை முன்னேற்றப்பாதைக்குக் கொண்டுசெல்ல வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அதேசமயம் ஏறாவூர்ப் பிரதேசத்தில் கட்சியின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக இவருக்குப் பொறுப்பளிக்கப்பட்டுள்ள றகுமானியா றிபாய்ப்பள்ளி மற்றும் அல்- ஜுப்ரிய்யா ஆகிய வட்டரங்களில் தலா 75 பேர் வீதம் தெரிவுசெய்யப்பட்ட 225 பயனாளிகளுக்கு பேரீச்சம் பழப்பொதிகள் கையளிக்கப்பட்டன.

இவரது சொந்த நிதியிலிருந்து பேரீச்சம் பழங்கள் வழங்கப்பட்டதுடன், றகுமானியா வட்டாரத்தின் பதியுதீன் மஹ்மூத் பாடசாலை மண்டபத்தில் அதிபர் எம்எம். ஜலால்தீன் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது .

அதிபர் அவர்களின் தலைமை உரையில் “இந்த வைபவம் நடைபெற்ற மண்டபம் இவரது சொந்த நிதியில் கட்டிக்கொடுக்கப்பட்டது”என்பதை மக்கள் மத்தியில் தெரிவித்தார்.

சமய தலைவர்கள் ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதேச அமைப்பாளர்கள் மற்றும் பிரதேச முக்கியஸ்தர்களும் இந்த நிகழ்வில் கொண்டிருந்ததுடன், ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் பிர்தௌஸ் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்க ஆகியோரின் பிறந்த தினத்தையொட்டி வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

தொடர்புடையசெய்திகள்

தீலீபனின் சிலை நிறுவப்பட்டமை தொடர்பில் நால்வருக்கு அழைப்பாணை
செய்திகள்

தீலீபனின் சிலை நிறுவப்பட்டமை தொடர்பில் நால்வருக்கு அழைப்பாணை

October 5, 2026
மக்களை ஏமாற்ற நினைக்கும் பேக்கரி உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை
செய்திகள்

மக்களை ஏமாற்ற நினைக்கும் பேக்கரி உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை

October 4, 2026
ரூ.10 மில்லியன் நஷ்டஈடு செலுத்தாவிட்டால் 9 ஆண்டுகள் சிறை; பிரசன்ன ரணதுங்கவுக்கு எச்சரிக்கை
செய்திகள்

ரூ.10 மில்லியன் நஷ்டஈடு செலுத்தாவிட்டால் 9 ஆண்டுகள் சிறை; பிரசன்ன ரணதுங்கவுக்கு எச்சரிக்கை

October 4, 2026
ஜன்னல் வழியே வாந்திப் பையை வீசிய பயணி – பஸ்ஸின் கண்ணாடி சேதம்; ரூ.18,000 நஷ்டஈடு
செய்திகள்

ஜன்னல் வழியே வாந்திப் பையை வீசிய பயணி – பஸ்ஸின் கண்ணாடி சேதம்; ரூ.18,000 நஷ்டஈடு

October 4, 2026
லிட்ரோ எரிவாயு விலை தொடர்பான அறிவிப்பு
செய்திகள்

லிட்ரோ எரிவாயு விலை தொடர்பான அறிவிப்பு

October 4, 2026
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புதிய சிறுநீரகப் பராமரிப்பு பிரிவு திறந்து வைப்பு
செய்திகள்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புதிய சிறுநீரகப் பராமரிப்பு பிரிவு திறந்து வைப்பு

October 4, 2026
Next Post
கொழும்பில் கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!

கொழும்பில் கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.