மட்டக்களப்பு மட்டிக்களி மீன் சந்தைக்கு அருகில் உள்ள ஆற்றங்கரையோரம் இன்று (29) காலை மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இவர் கிரான்குளத்தை சேர்ந்த இராஜரெட்ணம் என்னும் 62 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை என தெரியவந்துள்ளதுடன், இவர் பலசரக்கு கடை உரிமையாளர் எனவும் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த நபர் அடிக்கடி மட்டக்களப்பு மாமாங்க பிள்ளையார் ஆலயத்திற்கு சென்று வருபவர் எனவும், நேற்று காலை 11.00 மணியளவில் வழமை போல ஆரையம்பதி சந்தைக்கு பொருட் கொள்வனவிற்காக சென்றிருந்த போது காணாமல் போயிருந்ததாக உறவினர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.
அதேசமயம் சம்பவ இடத்திற்கு குறிப்பிட்ட நபரின் மகன் வருகை தந்துள்ளதுடன், மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.