சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென கூறி பணமோசடியில் ஈடுபட்ட நால்வர் பலாங்கொடையில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கடுவான மாத்தறை பெலியத்த மற்றும் திஹகொட பிரதேசங்களைச் சேர்ந்த நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/04/image-147-edited.png)
சிறுநீரகநோயால் பாதிக்கப்பட்டவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென தெரிவித்து மக்களை ஏமாற்றி பணம் சேகரித்துக் கொண்டிருந்த மூன்று பெண்கள் மற்றும் ஆண் ஒருவரை பலாங்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு சேகரிக்கும் பணத்தில் முச்சக்கர வண்டியை செலுத்தும் நபருக்கு ஒரு நாளைக்கு 4000 ரூபாவும் பெண் ஒருவருக்கு ஒரு நாளைக்கு 2000 ரூபாவும் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தார்.
சந்தேகநபர்களை பலாங்கொடை மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.