சீனாவின் சர்ச்சைக்குரிய கரிம உர இறக்குமதி ஒப்பந்தம் தொடர்பாக, கையூட்டல் மற்றும் ஊழல்களை குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையகத்தால், ஊவா மாகாணத்தின் தலைமைச் செயலாளரும், தேசிய உரச் செயலகத்தின் முன்னாள் இயக்குநருமான மகேஸ் கம்மன்பில, கைது செய்யப்பட்டுள்ளார்.
விவசாய அமைச்சில் மேலதிக செயலாளராகப் பணியாற்றிய போது, சீன நிறுவனம் ஒன்றிடமிருந்து தரமற்ற கரிம உரங்களை இறக்குமதி செய்வதற்கு வசதியாக, இடைநிறுத்தப்பட்ட கடன் கடிதங்களை மீண்டும் திறக்க கம்மன்பில உத்தரவிட்டார் என்ற குற்றச்சாட்டு தொடர்பிலேயே இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கை நிர்வாக சேவை சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றும் கம்மன்பில, நாட்டின் சிவில் சேவையில் நீண்டகால சேவையாளராக உள்ளார்.
கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கம்மன்பிலவை, மே 5 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.