மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் வெடிப்பொருட்கள் சில இன்று காலை (05) மீட்கப்பட்டுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.
ஊரியன் கட்டு கிராம சேவகர் பிரிவின் பெரிய தட்டுமுனையில் உள்ள விவசாய காணியொன்றிலேயே அவை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இன்று காலை வழக்கம் போல் குறித்த காணியில் பயிர் செய்கை நடவடிக்கைக்காக நீர் குழாய் பொருத்தும் முகமாக குழியொன்றினை தரையில் வெட்டிய போது பொலித்தீன் பையில் மறைத்து வைக்கப்பட்டு சுற்றப்பட்ட நிலையில் மர்மப் பொருள் தென்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக உடனடியாக அருகில் உள்ள 233 ஆவது வாகரை இராணுவப் படைப் பிரிவிலுள்ள இராணுவ புலனாய்வாளர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று நிலமைகளை அவதானித்தன் பின்னர், கதிரவெளி விசேட அதிரடிப் படையினரின் ஒத்துழைப்புடன் அவற்றினை மீட்டு வாகரை பொலிசாரிடம் நீதி மன்ற நடவடிக்கைக்காக ஒப்படைத்துள்ளனர்.
இதன்போது 81 மோட்டார் துப்பாக்கி,அதற்கு பொருத்தும் பரல்-1,பை போட்-1,வேஸ் பிளேட்-1 ஆகியவையே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இவை கடந்த காலத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பினரால் பயன்படுத்தப்பட்டவையாக இருக்கலாம் என தெரிவித்தனர்.
இதன்போது வாகரை 233 ஆவது படைப் பிரிவின் இராணுவ உயர் அதிகாரிகள்,பொலிசார் ஆகியோர்உடன் சமூகமளித்திருந்தனர்.