கால்நடைகளை திருடும் நபருக்கு தற்போது விதிக்கப்படும் 10,000 ரூபா அபராதத்தை திருத்தம் செய்து பத்து இலட்சம் ரூபாவாக அதிகரிக்க புதிய சட்டமூலம் கொண்டுவரப்படவுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதேவேளை மாடு திருடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்டங்கள்(Law and Order) நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கால்நடை உரிமையாளர்களுக்கு பெரும் இடையூறாக இருக்கும் மாடு திருடர்களுக்கு மிக உயர்ந்த தண்டனை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் நீதி நடவடிக்கைக்கு இணையாக மாடு திருடர்களை கைது செய்யும் நடவடிக்கையும் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அமரவீர தெரிவித்துள்ளார்.