Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சட்டவிரோத பிரமிட் முதலீட்டுத் திட்டம் மூலம் 225 கோடி சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்தவர் கைது

சட்டவிரோத பிரமிட் முதலீட்டுத் திட்டம் மூலம் 225 கோடி சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்தவர் கைது

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கை மத்திய வங்கியால் தடைசெய்யப்பட்ட சட்டவிரோத பிரமிட் முதலீட்டுத் திட்டம் ஒன்றை நடத்தி, 225 கோடி ரூபாய்க்கு மேல் சட்டவிரோதமாக பண பரிமாற்றம் செய்த சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட அந்த நிறுவனத்தின் பணிப்பாளரை, எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (30) உத்தரவு பிறப்பித்தது.

சந்தேக நபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில், சந்தேக நபர் ஃபூகோ ஒலின் பிரைவேட் லிமிடெட் (Fugo Olin Private Limited) என்ற நிறுவனம் ஒன்றை நடத்தி, பிரமிட் முதலீட்டுத் திட்டம் ஒன்றை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, 2023ஆம் ஆண்டு ஐந்து மாத காலப்பகுதியில், அந்த நிறுவனத்தின் 56 வங்கிக் கணக்குகள் மூலம் 220 கோடி ரூபாய்க்கு மேல் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த பணம் எந்த தரப்பினருக்கு சென்றது என்பது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட அந்த நிறுவனத்தின் பணிப்பாளரான எரங்க தில்ஷான் என்பவர் மீதான விசாரணைகள் இன்னும் முடிவடையாததால், அவரை விளக்கமறியலில் வைக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் கோரியது.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான், சந்தேக நபரை எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குஷ் மற்றும் ஹசீஸ் போதைப்பொருளுடன் 3 தாய்லாந்து பெண்கள் கைது!
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குஷ் மற்றும் ஹசீஸ் போதைப்பொருளுடன் 3 தாய்லாந்து பெண்கள் கைது!

September 20, 2026
‘பாடுமீன்களின் சமர் 2026’; தொடர்ச்சியாக 3ஆவது முறையாக சாம்பியனான மெதடிஸ்த மத்திய கல்லூரி!
செய்திகள்

‘பாடுமீன்களின் சமர் 2026’; தொடர்ச்சியாக 3ஆவது முறையாக சாம்பியனான மெதடிஸ்த மத்திய கல்லூரி!

September 19, 2026
அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதா?; ரிஷாட் பதியுதீன் பதிவு!
காணொளிகள்

அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதா?; ரிஷாட் பதியுதீன் பதிவு!

September 19, 2026
திருமணமாகி மூன்று நாட்களில் இளம்பெண் உயிரிழப்பு; மட்டக்களப்பில் சோகம்
செய்திகள்

திருமணமாகி மூன்று நாட்களில் இளம்பெண் உயிரிழப்பு; மட்டக்களப்பில் சோகம்

September 19, 2026
சவூதி சிறையில் உள்ள இலங்கை இளைஞரை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சவூதி சிறையில் உள்ள இலங்கை இளைஞரை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

September 19, 2026
மெதடிஸ்த மத்திய கல்லூரி – புனித மைக்கேல் கல்லூரி; கோலாகலமாக ஆரம்பமான ‘பாடுமீன்களின் சமர்’!
செய்திகள்

மெதடிஸ்த மத்திய கல்லூரி – புனித மைக்கேல் கல்லூரி; கோலாகலமாக ஆரம்பமான ‘பாடுமீன்களின் சமர்’!

September 19, 2026
Next Post
மின்சார வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு; சந்தேக நபர் கைது

மின்சார வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு; சந்தேக நபர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு