பரீட்சை திணைக்களத்தை எதிர்காலத்தில் இரண்டு பகுதிகளாக பிரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஒரு பிரிவினருக்கு பாடசாலை பரீட்சைகள் மாத்திரம் வழங்கப்படுமென எதிர்பார்க்கப்படுவதாகவும் மற்றைய பிரிவினர் பாடசாலை பரீட்சைகள் தவிர்ந்த ஏனைய பரீட்சைகளுக்காக ஒதுக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
பாடசாலைப் பரீட்சைகள் தவிர்ந்த ஏனைய நூற்றுக்கும் மேற்பட்ட பரீட்சைகளை பரீட்சை திணைக்களம் நடத்துவதாக தெரிவித்த ஜனாதிபதி, அரசாங்கப் பரீட்சைகளுக்கென தனிப் பிரிவு உருவாக்கப்படும் என்றும் வலியுறுத்தினார்.
இதேவேளை, உயர்தரப் பரீட்சை 2025 அல்லது 2026ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெறும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, “நான் 18 வயதில் பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்தேன். 21 வயதில் வெளியாகினேன். இன்று 21 வயதில் நுழைகின்றனர். இப்போது பேச்சுவார்த்தை நடத்துகிறேன். 2025 அல்லது 2026 இலிருந்து ஒரு சட்டம். இந்த பரீட்சை டிசம்பர் மாதத்தில் நடத்தப்பட வேண்டும். அவர்கள் உரிய மாதத்தில் பல்கலைக்கழகத்தில் சேர்க்கப்பட வேண்டும். அவர்கள் அதை மீறினால், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.” எனத் தெரிவித்திருந்தார்.
கண்டி மாவட்ட இளைஞர் மாநாட்டில் கலந்து கொண்ட இளைஞர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.