நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது குடும்ப உறுப்பினர்களுக்கு காப்புறுதித் தொகையை வழங்குமாறு நாடாளுமன்றத் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது வரை எம்.பி.க்கள் மட்டுமே காப்பீட்டுத் தொகையைப் பெற்று வருவதோடு, ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் ஆண்டுக் காப்பீட்டுத் தொகையின் மதிப்பு பத்து லட்சம் ரூபாய் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், தங்களது சம்பளத்தில் இருந்து சில தொகையை பிடித்தம் செய்து, தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் காப்பீடு தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
எதிர்வரும் வாரங்களில் நாடாளுமன்றத்தின் சபைக் குழுக் கூட்டம் நடைபெற உள்ளதாகவும், இந்த விடயம் குறித்தும் அங்கு கலந்துரையாடவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, பல மாதங்களாக நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நடத்தப்படவில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.